இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அவசர அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது நாட்டவர்கள் அதிகளவானோர் அங்கு பணிபுரிவதால், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தூதரகங்கள் ஊடாக முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் நம் நாட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் பணிபுரிபவர்கள் அதிகளவானோர் இருப்பதாகவும் அவர்கள் அனுப்பும் பணத்தில் தான் நாம் நாடென்ற வகையில் எழுச்சி பெற்றுள்ளதாகவும் எனவே அவர்களின் பாதுகாப்பிற்கு முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
அத்துடன், ஏற்கனவே இராணுவ நிலைமை தீவிரமடைந்து வருவதால், இதனை கவனத்தில் கொண்டு எமது நாட்டு மக்களுக்கான விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு உடன் செல்லுமாறும் எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.