இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.
அதன்படி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவையும் பூரண பங்களிப்பையும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் எமது அரசியல் குழுவின் முடிவின்படி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
மேலும் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய காங்கிரஸ் ,மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.