ஜூலை மாதத்திற்கான ICC சிறந்த வீராங்கனைக்கான தேர்வுப் பட்டியலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்துவும் தெரிவாகியுள்ளார்.
இலங்கை வீராங்கனையான சமரி அத்தபத்து, கடந்த ஜூலை மாதம் ஏழு முறை சம்பியனான இந்தியாவை எதிர்த்து 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ணத்தை சிறந்த முறையில் இலங்கை அணியை வழிநடத்தி வென்றெடுத்தார்.
சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை ஏற்கனவே இரண்டு முறை வென்றுள்ள அத்தபத்து இப்போது மூன்றாவது தடவையாகவும் விருதைப் பெற தெரிவாகியுள்ளார்.