பங்களாதேஷ் மாணவர்கள் புரட்சியால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பங்களாதேஷில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மாணவர்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் கெடு விதித்திருந்தது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக வெடித்த இந்த புரட்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.