இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப், தனது 55 வயதில் காலமானார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 1993யில் இருந்து 2005ஆம் ஆண்டுவரை விளையாடியவர் கிரஹாம் தோர்ப் (Graham Thorpe).
ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கிரஹாம் தோர்ப், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
55 வயதில் கிரஹாம் காலமானது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் விளையாடிய பெருமைக்குரிய கிரஹாம், 16 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் 6,744 ஓட்டங்கள் குவித்தார். அத்துடன் 105 கேட்சுகளும் பிடித்துள்ளார்.
அதேபோல் முதல்தர போட்டிகளில் 49 சதங்களுடன் 21,937 ஓட்டங்கள் குவித்துள்ளார். மேலும் 82 ஒருநாள் போட்டிகளில் 2,380 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.