சுமார் 15 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரங்களைக் கொண்ட கல்வி நிறுவனமாக இயங்கி வரும் Amazon College & Campus பம்பலபிட்டி தலைமைக் காரியாலயத்தில் ஒரு புதிய மாடியில் சந்தைப்படுத்தல் பிரிவினை ஆரம்பித்துள்ளது.
இந்நிகழ்வு நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தலைமையில், உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த கலாநிதி .கேரி கெல்ஸ்டோன் மற்றும் விசேட அதிதிகளாக கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ஜே.சேதுரத்னம் அவர்களும் பம்பலபிட்டி பொலீஸ் நிலைய அதிகாரி திரு. அபேரத்ன அவர்களும், இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் திரு.அன்ரோ டினேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.