பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷனா அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
அருண பங்கேற்ற போட்டி உள்நாட்டு நேரப்படி நேற்று (04) இரவு 11.15 மணிக்கு நடைபெற்றது.
06 ஹீட்களைக் கொண்ட இந்தப் போட்டியின் 5வது ஹீட் போட்டியில் அருண கலந்து கொண்டார்.
அவர் 44.99 செக்கன்களில் பந்தயத்தை முடித்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.