இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதன்படி, 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 64 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஜெப்ரி வண்டெர்சே 6 விக்கெட்டுக்களையும், சரித் அசலங்கா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிட்டதக்கது.