இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய 2 போட்டிகளில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாடமாட்டார் என சிறிலங்கா கிரிக்கெட் நேற்று (03) இரவு அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில், வனிந்து தனது 10வது ஓவரை வீசும்போது உபாதை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஹசரங்கவிற்கு பதிலாக ஜெஃப்ரி வென்டர்சே அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.