அபினவ் ரட்ணதுரையின் வாய்ப்பாட்டு மற்றும் மிருதங்க அரங்கேற்றம்..!

விஷாரத ரட்ணம் ரட்ணதுரையின் புதல்வர் அபினவ் ரட்ணதுரையின் வாய்ப்பாட்டு மற்றும் மிருதங்க அரங்கேற்றம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 க்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.


அபினவ் ரட்ணதுரை வாய்ப்பாட்டை இசைப்பேரொளி ஆரூரன் அருணந்தியிடமும், மிருதங்கத்தை இந்தியாவில் சிறந்த மிருதங்க வித்துவானான ”நவயுக நந்தி” பத்ரி சதிஷ் குமாரிடமும் கற்றுத் தேர்ந்தவராவார்.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மூத்த அறிவிப்பாளர் திரு B.H. அப்துல் ஹமீத் அவர்களும், சிறப்பு விருந்தினராக கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டனர். மேலும் இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், கலை அபிமானிகள் ஊடகவியலாளர்கள் என பெருமளவானோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்தனர்.


அபினவ் ரட்ணதுரை தனது சிறந்த குரல்வளத்தாலும், மிருதங்க கச்சேரியாலும் வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரது ரசனைக்கு விருந்தளித்ததோடு, அனைவரது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றுகொண்டார்.


அபினவ் ரட்ணதுரைக்கு VAIBZ NEWS சார்பில் எமது வாழ்த்துக்கள்.

SUBSCRIBE to get the latest news updates :