இந்த விபத்து இன்று (02) காலை 8.00 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை மட்டுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை நுவரெலியாவில் இருந்து ஹட்டன் சென்ற தனியார் சொகுசு பஸ்சும் தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா சென்ற லொரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பஸ்சில் பயணித்த சாரதி உட்பட ஐவர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மூவர் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாகவும் மூவர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை வைத்திய சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லிந்துலை நிருபர்.