கற்பிட்டி , உச்சமுனை தீவுப் பகுதியில் டிங்கி இயந்திர படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை மஞ்சள் கடற்படையினரால் நேற்று (31) மீட்கப்பட்டுள்ளது.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர் உச்சமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகுகினை பரிசோதனை செய்தனர்.
இதன்போது குறித்த இயந்திர படகுகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 17 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 749 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 23 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட 749 கிலோ கிராம் மஞ்சள் மற்றும் டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
நிருபர்: Mohammed Fayaz