இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்ளேனத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட ஒற்றையர் சதுரங்கப் போட்டிகளில் மன்னார் மாவட்டத்தில் 21 மாணவர்கள் தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் ஒருவர் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனி மற்றும் ஞாயிறு (27 இ 28) ஆகிய இரு தினங்கள் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் கிளிநொச்சியில் மாகாண மட்ட ஒற்றையர் சதுரங்கப் போட்டிகள் இடம்பெற்றன.
இதில் 07 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவில் 84 மாணவிகள் பங்கு பற்றியதில் 27 மாணவிகளும்
07 வயதுக்கு கீழ்பட்ட ஆண்கள் பிரிவில் 103 பேர் பங்குபற்றியதில் 34 நபர்களும்
இதில் 09 வயதுக்கு கீழ்பட்ட ஆண்களில் 141 மாணவர்களில் 44 மாணவர்களும்
09 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவில் 104 மாணிவிகள் பங்கு பற்றியதில் 34 பேரும்
11 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவில் 53 பேர் பங்குபற்றியதில் 17 பேரும்
11 வயதுக்கு கீழ்பட்ட ஆண்கள் பிரிவில் 116 பேர் பங்குபற்றியதில் 40 நபர்களும்
13 வயதுக்கு கீழ்பட்ட ஆண்கள் பிரிவில் 67 மாணவர்கள் பங்குபற்றியதில் 34 நபர்களும்
13 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவில் 48 பேர் பங்கு பற்றியதில் 15 நபர்களும் .
15 வயதுக்கு கீழ்பட்ட ஆண்கள் பிரிவில் 81 நபர்கள் பங்குபற்றியதில் 27 பேரும்
15 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவில் 31 நபர்கள் பங்குபற்றியதில் 15 பேரும்
17 வயதுக்கு கீழ்பட்ட ஆண்கள் பிரிவில் 29 பேர் பங்குபற்றியதில் 13 நபர்களும்
17 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவில் 16 நபர்கள் பங்கு பற்றியதில் 07 பேரும்
20 வயதுக்கு கீழ்பட்ட ஆண்கள் பிரிவில் 07 பேர் பங்கு பற்றியதில் 05 நபர்களும்
20 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவில 04 பேர் பங்குபற்றியதில் 03 பேரும் வடமாகாண ரீதியில் தகுதி பெற்றுளனர்.
இந்த தெரிவில் மன்னார் மாவட்டத்திலிருந்து 21 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் மன். புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையில் 09 மாணவர்களும் இ யோசேப் மாஸ்ரர் ஆங்கில பாடசாலையில் 01 மாணவரும் . முருங்கன் ஆரம்ப பாடசாலை 01 மாணவரும் . மாவிலங்கேணி றோ.க.த.க.பாடசாலையில் 02 மாணவர்களும் . தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 01 மாணவரும் இ துள்ளுக்குடியிருப்பு றோ.க.த.க.பாடசாலையில் 01 மாணவரும் இ கொண்டச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 01 மாணவரும் . சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் 03 மாணவர்களும் இ நானாட்டான் டிலாசால் கல்லூhயில் 01 மாணவரும் . டிலாசால் ஆங்கில பாடசாலை 01 மாணவருமே இந்த போட்டிகளில் தகுதி பெற்றுள்ளனர்.
இவற்றில் மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி மாணவனும் நானாட்டனைச் சேர்ந்த அன்ரனி யோண்சன் கிர்ஷான் என்ற மாணவன் 20 வயதுக்கு கீழ்பட்ட பிரிவில் முதலாவது இடத்தினைப் பெற்று வடமாகாண இந்த போட்டிகளில் மன்னார் மாவட்டம் சார்பாக முதலாவது தங்கப்பதக்கம் வென்று சாதனையைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)