நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகை சுஹாசினியின் தந்தையுமான நடிகர் சாருஹாசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகேந்திரன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சாருஹாசன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழில்களில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
கடைசியாக மைக் மோகனின் கம்பேக் திரைப்படமான ‘ஹரா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இவருக்கு 91 வயதாகிறது, வயது மூப்பின் காரணமாக நடிகர் சாருஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.