——————————————————-
கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தினால் மாவட்டச் செயலக சிற்றூண்டிச்சாலை அமைந்துள்ள பகுதியில் பல்பொருள் வியாபார நிலையம் 31.07.2024 புதன்கிழமை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரனால் திறந்து வைக்கப்பட்டது.
உத்தியோகத்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களினை மலிவு விலையில் பெற்றுக் கொள்ளும் வகையில் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இம் முயற்சிக்கு, மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,உத்தியோகத்தர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.