இராமநாதன் இ.ம.க மாணவி ஸ்ரீ மாதுரி ஒலிம்பியாட்டில் சாதனை..!

பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் மாணவி செல்வி. ஸ்ரீ மாதுரி சிந்தனைச் செல்வன் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச Chemistry Olympiad 2024 போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 3A சித்தி பெற்று, மாவட்ட ரீதியில் 4 ஆம் இடத்தையும், தேசிய ரீதியில் 22 ஆம் இடத்தையும் ஸ்ரீ மாதுரி பெற்றுள்ளார்.

தேசிய ரீதியில் இடம்பெற்ற Chemistry Olympiad 2024 போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற ஸ்ரீ மாதுரி, சவுதி அரேபியா ரியாத் நகரில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவானார். அங்கு வெண்கல பதக்கத்தை வென்று நாட்டுக்கும் தான் கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஸ்ரீ மாதுரி.

For Queries, Advertisements & Collaborations: WhatsApp : +94 761 529 533

அவரது தந்தை சிந்தனை செல்வன் பௌதிகவியல் ஆசிரியர் என்பதும், தாயார் ஸ்ரீ கௌரி உயிரியல் ஆசிரியை மற்றும் விரிவுரையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டிகளில் அவர் கலந்து கொள்வதற்கான அனுசரணையை இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்க UK கிளை வழங்கி இருந்தது.

ஸ்ரீ மாதுரி மேலும் பல சாதனைகளைப் படைக்க VAIBZ NEWS இன் வாழ்த்துக்கள்.

அவரது சாதனைகள் சில..

Grade 5 Scholarship 2014 results
District 2nd

Srilankan Mathematics Olympiad 2019
Bronze medalist

Social science competition 2019
Western Province 1st
Island 7th

Srilankan Mathematics Olympiad 2020
Bronze medalist

Chithambara Mathematics Competition 2018
Gold medalist
Island 4th

O/L results 2020
9As
District 1st
Island 4th

A/L results 2023
3As
District 4th
Island 22nd

National Chemistry Olympiad 2024
Silver medalist

National biology Olympiad 2024
Silver medalist

2024 International Chemistry Olympiad held in Saudi Arabia King Saud University Riyadh on July 29th 2024
Bronze medalist

Connect with VAIBZ NEWS Online

SUBSCRIBE VAIBZ TV to get the latest Tamil news updates: