ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஸ இன்று (01) கட்டுப்பணம் செலுத்தினார்.
ராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இதுவரை 07 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.