ஆசிய கிரிக்கட் சம்பியனான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (15 கோடி இலங்கை ரூபாவை பரிசாக வழங்கியது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்.
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, அதன் உப தலைவர் ஜயந்த தர்மதாச, ரவீன் விக்ரமரத்ன, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் கொழும்பில் உள்ள சினமன் கிராம் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அதபத்துவிடம் காசோலை வழங்கப்பட்டது.