மன்னார் மெசிடோ அதாவது சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரனையுடனும் ஏற்பாட்டிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள வவுனியா மாவட்டத்தை தவிர ஏனைய அம்பாறை , திருகோணமலை . மட்டக்களப்பு , யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கி இளையோரை முன்னெடுத்து வடகிழக்கு இளம் மீனவர் கூட்டு என்ற கூட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஒரு பொது மண்டபத்தில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு கிழக்கிலுள்ள ஏழ மாவட்டங்களிலிருந்தும் இளையோர் பங்குபற்றியிருந்தனர்.
இதன் முக்கிய நோக்கம் மீனவ சமூகங்கள் அடுத்த தலைமுறையினரான இளையோரை வழிநடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது.
இந்த பொறுப்பை இன்றைய இளம் சமூகம் தட்டிக் கழிக்க முடியாது. மீனவ இளம் சமூகத்தினர் இந்த பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவர்கள் மீனவ வளத்தையும் மீனவ சட்டத் திட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்களில் இவர்களின் பங்கேற்றல் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஏனைய மீனவ சங்கங்கள் மற்றும் சமாசங்கள் ஆகிய நிர்வாகத்தில் கனிசமான இளையோர் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் போன்ற முக்கிய விடயங்களுடன் இந்த அமர்வில் இளையோரின் பங்குபற்றல் காணப்பட்டது.
நிருபர் (வாஸ் கூஞ்ஞ)