மணிரத்னம் இயக்கும் கமல் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள தக் லைஃப் படத்துடைய டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த படத்திற்காக கமல்ஹாசன் டப்பிங் பேசும் காட்சிகளை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாகத்தான் இந்த படத்துடைய ஷூட்டிங் ஆரம்பித்தது. இந்நிலையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி முடித்து டப்பிங் பணிகளை மணிரத்னம் மேற்கொண்டு வருகிறார். படத்தில் அவர் காட்டும் வேகம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து எந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் நாயகன் படத்திற்கு பின்னர் கமலும் மணிரத்திமும் அடுத்த படத்தில் இணைவார்கள் என்று அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து தக் லைஃப் என்ற என்று பெயரிடப்பட்ட அந்த படத்துடைய டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த படத்தில் கமலுடன் சிம்பு, பங்கஜ் திரிபாதி, அலி பைசல், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்ய லட்சுமி, சானியா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். முன்னதாக இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் நடிப்பார்கள் என்று அறிவிப்பு வெளியானது. பின்னர் சில காரணங்களுக்காக அவர்கள் இந்த படத்தில் இருந்து விலகினர்.
தக் லைஃப் படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ரவி கே சந்திரன், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்துடைய ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்று.
Advertisement
Advertisement