இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்தது.
ஷமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இன்று தம்புள்ளை மைதானத்தில் இந்திய மகளிர் அணியை எதிர்த்து விளையாடியது,
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர்அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.
166 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
அணித் தலைவியான ஷமரி அத்தபத்து 61 ஓட்டங்களையும், ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இலங்கை அணி சார்பில் கவிஷா தில்ஹாரி 30 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.