உலக வரலாற்றில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தலில் AI தொழில்நுட்பம் – AKD இணையதளம்

akd.lk இணையதளம் -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரா குமார திஸ்ஸநாயகவினால் உத்தியோகபூர்வமாக நேற்று (27) பிற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

உலகில் ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளரொருவர் தனது கொள்கையை மக்கள் மயப்படுத்துவதற்காக AI தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், ஆசியாவில் அரசியல் தலைவரொருவர் தனது கொள்கையை முன்வைப்பதற்காக AI தொழினுட்பத்தை பயன்படுத்திய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.

நாட்டின் பிரஜைகளுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் AKD இணையதளத்தில் தமக்கிருக்கும் சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்வதற்கான AI Chat Bot உம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த தளத்தின் விசேட அம்சமாகும்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை நிலையமானது கொள்கை உருவாக்கத்திற்காக பிரஜைகளுக்கு பன்முக அணுகுமுறையை பெற்றுக்கொடுப்பதோடு, தேர்தல் அவதானிப்பு நிலையம் தேர்தல் செயன்முறைக்குள் இடம்பெறக்கூடிய அத்துமீறல்கள் தொடர்பாக முறையிடுவதற்கும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும் பிரஜைகளுக்கு திறந்த களத்தை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Click the image to visit SHS

VAIBZ நியூஸ் சமூக வலைத்தளங்களை பின் தொடர்வதன் மூலம் இலங்கை,இந்திய,உலகம் , சினிமா,விளையாட்டு ,சமூகம்,நேர்காணல் ,இப்படி பல தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.