9வது மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (28) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.
போட்டித் தொடரை நடத்தும் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் போட்டி நடைபெறவுள்ளது.
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது இது 9வது முறையாகும், மேலும் இந்திய வீராங்கனைகள் 7 முறை ஆசிய செம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
இலங்கை மகளிர் அணி 6 தடவைகள் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், 5 தடவைகள் ஆசிய ரன்னர்ஸ்-அப்களாக போட்டியை நிறைவு செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.