இலங்கைக்கு எதிரான முதல் T20… இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…!!

இலங்கைக்கு எதிரான முதல் T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்பட்ட நிலையில் கடைசி 32 பந்துகளில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட T20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இன்று பல்லிகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் T20 போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ரன்களை சேர்க்க ஸ்கோர் எகிறியது.

16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தபோது சுப்மன் கில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் – ரிஷப் பந்த் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர்.

பந்த் 49 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 213 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். இலங்கை தரப்பில் பதிரனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் மற்றும் பதும் நிசாங்கா அதிரடியாக ரன்களை சேர்த்து இந்திய அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

விளம்பரம்

விளம்பரம்

மெண்டிஸ் 45 ரன்களில் ஆட்டமிழக்க நிசாங்கா 48 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிந்தார். குசால் பெரேரா 20 ரன்களும், கமிந்து மென்டிஸ் 12 ரன்களும் எடுத்தனர்.

14 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்திருந்த இலங்கை அணி அடுத்த 32 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. 19.2 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இலங்கை தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 2 ஆவது T20 கிரிக்கெட் போட்டி, இதே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.