இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் கொழும்பில் நடைபெற உள்ளது. இந்நடமாடும் சேவை நாளை 27 மற்றும் 28 நாளை மறுதினம் ஹோமாகம பொது விளையாட்டரங்கில் இடம்பெறும்.
அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை தொழில்வாய்ப்புக்களை தேடுவோர் மற்றும் பணியில் கடமையாற்றுபவர்களுக்கு பங்களிப்பை வழங்குவதன் மூலம் சமூகத்தில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஹரசர திட்டம் , கருசரு திட்டம் , ஸ்மார்ட் யூத் கிளப் திட்டம் மற்றும் சிரம வாசனா நிதியம் என்பன ஒன்றிணைந்து கொழும்பு மாவட்ட மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றன.
குறிப்பாக இதன் போது தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள்,குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பாடசாலைப் புத்தகப்பையுடன் கூடிய உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது .
மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வலுப்படுத்தும் முகமாக அவர்களின் குடும்பத்தினருக்குசுயதொழில் செய்வதற்கன நிதி உதவிகல் வழங்கப்படும்.
கொழும்பு மாவட்ட மக்களுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் சேவைகளை பெற்றுக்கொடுப்பது ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவையின் நோக்கமாகும் .