நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன காலமானார்.
முதுமை காரணமாக சுகயீனமுற்றிருந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், (25) அதிகாலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரேஸ்ட அரசியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமான விக்ரமபாகு கருணாரத்ன தனது 81ஆவது வயதில் காலமானார்.
2010 ஜனாதிபதித் தேர்தலில் மேசைச் சின்னத்தில் விக்ரமபாகு கருணாரத்ன போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1943 மார்ச் 08ஆம் திகதி பிறந்த கேம்பிரிட்ஜ் கல்வியாளரான இவர், இலங்கை விஞ்ஞானியுமாவார்.