1981 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனத்தை வெளியிடும் திகதியும், பெயர் குறித்த நியமனங்களை ஏற்கும் திகதியும் பற்றி அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமாணி அறிவித்தலை இன்று (ஜூலை மாதம் 26ஆம் திகதி) வெளியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தள்ளது.
அதேபோல் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதியும், ஏனைய நியதிச்சட்ட ஏற்பாடுகளும் பற்றி பல்வேறு தரப்பினர்கள் மற்றும் கட்சிகளால் முன் வைக்கப்படும் கருத்துக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு பொறுப்புடையதல்ல என்றும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.