யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த முகுந்தன் தீபா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் அவரோடு பயணித்த க.பொ.த . உயர்தரம் கற்கும் அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வேளை எதிரில் வந்த கனரக வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.