தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான ’மெர்சல்’ திரைப்படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்த படத்திற்கு ’மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஹரி பாஸ்கர் நாயகனாகவும், பிக் போஸ் புகழ் லாஸ்லியா நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை லாஸ்லியா ஏற்கனவே ’பிரண்ட்ஸ்’ மற்றும் ’கூகுள் குட்டப்பா’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ’மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓஷோ வெங்கட் இசையில், குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவில், ராமசுப்பு படத்தொகுப்பில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.