கிளிநொச்சியில் சீன அரிசி வழங்கும் செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடமிருந்து கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அரிசி வழங்கும் செயற்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று(24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரிசி வழங்கும் மாவட்ட நிகழ்வு பூநகரி கடற்றொழில் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் இரட்ணம் அமீன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கடற்றொழில் திணைக்களம் ஊடக 2,981 கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு இருபது கிலோ கிராம் அரிசி வீதம் வழங்கப்படவுள்ளது.

தொடர்ந்து இந்த அரிசி பளை, கண்டாவளை, பூநகரி, நாச்சிக்குடா ஆகிய நான்கு கடற்றொழில் அலுவலகங்கள் ஊடக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.