ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் அநுர குமார திசாநாயவுக்கும் இடையிலான சந்திப்பு..!!

தற்போது ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumi க்கும் இடையில் (22) பிற்பகல் குறித்த அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இன்றளவில் இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக இருந்துவருகிற நட்புறவு குறித்தும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தக்கட்ட நகவர்வுகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஜப்பான் வெளிவிகார அமைச்சர் ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இந்த சந்திப்பில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் Tsutsumi Taro அவர்களும் அந்தப் பிரிவின் பிரதி பணிப்பாளர் IWASE Kiichiro அவர்களை உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் தேசிய மக்கள் சக்தியின் ஜப்பான் குழுவின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.