விடாமுயற்சி படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவு!

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் கடந்த ஆண்டு தொடங்கியது, படத்தின் பஸ்ட் ஷெட்யூல் படமாக்கப்பட்டு முடிந்த நிலையில், நிதி சிக்கல் காரணமாக சிலகாலம் படப்பிடிப்பு தள்ளிப்போனது அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில், முழுவீச்சில் தொடர்ந்து 30 நாட்கள் நடந்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. விடாமுயற்சி படத்தின் அஜர்பைஜான் ஷெட்யில் நிறைவடைந்ததாக, புகைப்படம் மற்றும் விடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது, இந்த செய்தி தற்போது அஜித் ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.