ஆந்திரா நீர்வேளாண்மை திட்டம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள விஜயம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கோதாவரி ஆற்றின் கரையோரத்தில் இராமகுண்டம் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூண்டில் மீன்கள் வளர்க்கும் நீர்வேளாண்மை முறைமையைபார்வையிட்டார்.

இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய அங்கு சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன் குஞ்சுகள் பெருக்கம், அறுவடை மற்றும் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.