கண்டியில் பாரத்- லங்கா குளோபல் யோகா நிகழ்வு

அண்மையில் பாரத்- லங்கா குளோபல் யோகா நிகழ்வு கண்டியில்,இலங்கையின் பாரம்பரிய நடனங்கள் மங்கள விளக்குகள் ஏற்றப்பட்டு அக்கினி யோஹத்ரா பூஜை மற்றும் தாய் தந்தையரை போற்றும் பக்தி பூஜையுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வை இலங்கை Bharat-Lanka Global Yoga நிலையம் ஏற்பாடு செய்திருந்தனர். முக்கியமாக இந்த நிகழ்வில் பல வெளிநாடுகளிருந்து யோகா குருக்கள் பங்குபற்றிருந்தனர்.


இந்திய மற்றும் மலேசியாவிலிருந்து Dr. ஆதிரன் சுரேஷ் உடன் அவரின் யோகா குழு,சர்வதேச யோகா குழுக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.யோகா பயிற்சிகள் விழிப்புணர்வு நிகழ்வுகழும் நடைபெற்றன. பாடசாலை மாணவர்களும் யோகா திறமைகளை வெளிப்படுத்தினர்.