எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவல்.
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவில் எல்ரோட் தீகல எல்ல வனப் பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் இரண்டு மர மீன்கம்பங்கள் எரிந்து சாய்ந்துள்ளமையினால் அடாவத்தை, எல்ரோட், லுணுகலகம ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் லுணுகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ராமு தனராஜா