அவுஸ்திரேலியாவின் 30வது பிரதமர் ஸ்காட் மொரிசனை சந்தித்த இ.தொ.கா தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் 30வது பிரதமர் ஸ்காட் மொரிசனை இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் சந்தித்து,கிழக்கு மற்றும் மலையகம் தொடர்பான மனிதவள வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
மனிதவளத்தை ஊக்குவித்தல்,அதை நவீனப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இது தொடர்பான வேலைத்திட்டத்தை அவுஸ்திரேலியாவுடன் இணைந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.