இலங்கை செல்லும் இந்திய அணி, தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.இதனைத் தொடர்ந்து, ஜூலை 27ஆம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்கும். முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளில் ஒருநாள் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
மேலும், இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இளம் வீரர்கள்தான் அதிகம் இடம்பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவியை, சூர்யகுமார் யாதவிடம் கொடுத்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், ரிஷப் பந்த், ரியான் பராக், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.
இந்திய ஒருநாள் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை புறக்கணித்துள்ளனர். கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த இவரை, ஒருநாள் அணியில் சேர்க்காததற்கு பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.