இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களது எண்ணக்கருவுக்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற திறமையுடைய 100.000 மாணவர்களுக்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் 6,000 பேருக்கும் புலமைப்பரிசில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்துக்கு இணையாக நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு (16) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 1500 பேருக்கு புலமை பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, மௌலானா அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.