மனித உரிமை அலுவலகத்தில் சிவில் அமைப்புகள் மகஜர் கையளிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டடுள்ள தலவாக்கலை நோர்வூட் கொத்மலை ஆகிய பிரதேச செயலகங்களில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் அரச சேவைகளை பெற்றுக் கொள்ள செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த பிரதேச செயலகங்களில் உத்தியோஸ்தர்கள் அமர்ந்து பணிகளை தொடர முடியாத நிலையில் இடப்பற்றாக்குறை காணப்படுகிறது.

அதேவேளை பிரதேச செயலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை செய்து கொள்ள முடியாத அளவிற்கு இட வசதிகள் இல்லாத காரணத்தினால் பிரதேச செயலக முற்றத்தில் வரிசையாக காத்திருந்து தங்களுடைய தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியாத நிலைமையை காணப்படுகிறது.

இவ்வாறு வசதி இல்லாமல் காத்திருக்கின்ற பொதுமக்கள் பலர் மயக்கமுற்று விழுந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

அரசாங்கம் பிரதேச செயலகங்களை ஆரம்பிக்கும் போது சகல சேவைகளையும் மக்கள் இந்த காரியாலயத்தில் செய்து கொள்ள முடியும் .

என கூறிய செயலகத்தை திறந்தாலும் ஒரு வருடம் பூர்த்தி செய்த போதும் இதுவரை செயலக நடவடிக்கைகள் மக்களுக்கு உகந்த நிலையில் இல்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக பிறப்பு சான்றிதழ் திருமணச் சான்றிதழ் மரண சான்றிதழ் அடையாள அட்டை மற்றும் வாகன சான்றிதழ்களை பதிவு செய்வதற்காக செல்லும் நபர்களும் தங்களுடைய தேவைகளை குறித்த நேரத்துக்கு செய்து கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இங்கு காணப்படும் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்து.

அட்டன் பகுதியில் உள்ள சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்ட 25,000 க்கு மேற்பட்ட கையொப்பங்களை கொண்ட மகஜர் ஒன்றினை 17 அன்று சிவில் அமைப்பின் உறுப்பினர்கள் அட்டனில் இயங்குகின்ற இலங்கை மனித உரிமை காரியத்தின் பிராந்திய இணைப்பாளர். எச் கே .வித்தாரன அவர்களிடம் கையளித்தனர்.

பிராந்திய இணைப்பாளர் அவருடன் இடம்பெற்ற கலந்துரையுடன் போது பிரதேச செயலகத்தின் காணப்படும் குறைபாடுகள் அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது. தொடர்பாகவும் மேலும் மழையக கல்வி தோட்ட தொழிலாளர்கள் இதன் நோற்கும் உரிமை ரீதியான பிரச்சனைகள் காணி வீடு. வாக்களிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் தோட்டப்புறங்களில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடல் செய்யப்பட்டது .

கலந்துரையாடல் செய்யப்பட்ட விடயங்களை நிவர்த்தி செய்வதற்கு மனித உரிமை திணக்கலத்தின் ஊடாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பான. விளக்கத்தை அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வு சமூக செயல்பாட்டாளர் என் கருணாகரன் CCCDG வேலைத்திட்டத்தின் கீழ் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.