கன மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு..!!

மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவு பகுதிகளில் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகிறது. அதனால் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட இன்னும் மூன்று அடி மட்டுமே உள்ளது, கென்யோன் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி உள்ளது.

ஆகையால், தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தனகலபட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன மழை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கையும், பண்ணையாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் வருகை மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஸ்கெலியா நிருபர்