ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேப்பிட்டஸ் அணி கடந்த 2021ல் நடந்த ஐபிஎல் தொடரில் 20 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால் 2022ல் 5வது இடத்தை பிடித்த டெல்லி அணி 2023ல் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த ஐபிஎல் தொடரிலும் 14 புள்ளிகளை பெற்று 6வது இடத்தையே பிடித்தது.
இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வாங்காத டெல்லி அணி தொடர் தோல்விகளால் விமர்சனங்களுக்குள்ளானது. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ரிக்கி பாண்டிங் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் டெல்லி அணியின் இயக்குநராக உள்ள சவுரவ் கங்குலி, அணியின் தலைமை பயற்சியாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.